*மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஐந்தாவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அக்னி சிறகுகள் பவுண்டேஷன் சார்பாக 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்*
திண்டுக்கல்லில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இரத்த தானம் அளிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அதனைச் சுற்றியுள்ள அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . திண்டுக்கல் முதல் செம்பட்டி வரை உள்ள பகுதி முழுவதும் விதைப்பந்து தூவி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் கிராமப்புற பள்ளி ஏழை குழந்தைகளுக்கு ஒருவேலை உணவு ,,கபசுரகுடிநீர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதன்பின் செம்பட்டி, வக்கம்பட்டி, பாறைப்பட்டி,பித்தலைப்பட்டி, திண்டுக்கல் பகுதியில் இருக்கும்ஆதறவற்ற ஏழை எளிய முதியோர்களுக்கு ஒருவேளை உணவு அளிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் பெருநகராட்சிக்கு உட்பட்ட சாஸ்த்தாநகர் பகுதிகளில் நகராட்சியுடன் இணைந்து கிருமிநாசினி தெளித்தும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அக்னி சிறகுகள் பவுண்டேஷன் சார்பில் இளைஞர்கள் மற்றும் திண்டுக்கல் பிஜேபி கிழக்குமாவட்ட தலைவர் தனபாலன்ஜி, திண்டுக்கல் கிழக்கு பி.ஜே.பி.இளைஞர் அணிச்செயலாளர் தமிழ்வாணன், அக்னி சிறகுகள் பவுண்டேஷன் மேலாளர் திண்டுக்கல்பாலாஜி, திரிசக்தி மகாஸ்த்தான அறக்கட்டளை நிறுவனர் பால மகரிஷி , அக்னி சிறகுகள் நிறுவனர் எஸ்.கே.எம்.முருகேசன்மற்றும் பலர் கலந்து கொண்டனர் . மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
*நிருபர் அழகர்சாமி திண்டுக்கல் மாவட்டம்.*