ஒற்றுமையே எங்கள் சங்கத்தின் பலம்.
ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா.
ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அறவாழி அவர்களின் ஏற்பாட்டின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.இதில் தலைவர் V. C. P. அம்பலவாணன், பொதுச் செயலாளர் தமிழன் வடிவேல், பொருளாளர் நரியார்.அரி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளான தலைவர்.அறவாழி, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் அசோகன் மற்றும் திருவண்ணாமலை ஊடக உரிமைக் குரல் சங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் சீனிவாசன், திருநாவுக்கரசு மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.
இதில் சக பத்திரிகையாளர்களின் வளர்ச்சி குறித்தும், சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-
(1) திருவண்ணாமலை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் அவர்கள் பத்திரிகையாளர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் , அனைவரும் பத்திரிகையாளர்கள் என்ற ஒருமித்த உணர்வோடு செயல்பட வேண்டும்.
(2) மாவட்டத்தில் வழங்கிக் கொண்டுவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டு வரும் அரசாங்க அடையாள அட்டையை விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
(3) பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தினசரி இதழ்களுக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படும் விளம்பரங்களை வழங்க வேண்டும்.
(4) செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலரால் உருவாக்கப்பட்ட செய்தியாளர்கள் வாட்ஸ்அப் குழுவில் அனைத்து நிருபர்களையும் இணைக்க வேண்டும்.
போன்ற சக பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் செயல்பட வேண்டும் என்று ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகல்:-
1.மாவட்ட ஆட்சித்தலைவர்
2. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர்
3மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
4 செய்தித்துறை இயக்குனர்
5.செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்களுக்கு நகல் இணைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
வி.எம்.தமிழன் வடிவேல்.
பொதுச் செயலாளர்.
ஊடக உரிமைக் குரல்
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்.
9445272820,7904654776