அரசியல்

ஆர்.கே.நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்! ஒ.பன்னீர்செல்வம்! பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

Spread the love

 

சென்னை, நவ.,15
வடசென்னை வடக்குகிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆர்கேநகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மழை வெள்ள பகுதிகளை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடந்து மாவட்ட கழக கழகசெயலாளர்ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் இ.எஸ். சதீஷ் பாபு, ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகளை ஓ. பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வழங்கி அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாநில அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் ஆர் கமலக்கண்ணன், பொருளாளர் அப்துல் ஹமீது, வண்ணை கணபதி, எஸ்.பி. வரதராஜன், ஆர்.கே.நகர் தொழிற்சங்கபகுதி செயலாளர் டி.பிரபா, ஆட்டோ தேவராஜ், ஏ.ஜெயவேல், மற்றும்
தொழிற் சங்கத்தை சார்ந்த பல்வேறு நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Print Friendly, PDF & Email
idimurasutv
idimurasuTv please share
https://idimurasutv.com