காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தக் கூடாது தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி கலெக்டர் உத்தரவின்பேரில் காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில் விஏஒ(மேற்க்கு)
சதீஷ்குமார், இளநிலை உதவியாளர் பாரதியார்,’ சித்ரா, ராஜேந்திரன்,மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மளிகை, பேக்கரி, டீக்கடை மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் இருந்து 85 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அரசின் விதிமுறையை பின்பற்றாமல் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்திய கடைகளுக்கு 2,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் வணிக நிறுவனங்களில் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டை தவிர்க்குமாறு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
Good post. I learn something new and challenging on sites I stumbleupon everyday. Its always interesting to read articles from other authors and practice something from other sites.