ஜூலை . -15 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள வளமீட்பு பூங்காவில் நடைபெற்று வரும் இயற்கை உரம் தயாரித்தல் மண்புழு உரம் தயாரித்தல் பழமையான கழிவுகளைக் கொண்டு சுத்திகரிப்பு துவக்க நிலையை பார்வையிட்டார் மேலும் மண்புழு குளியல் நீர் முட்டை ஓட்டில் இருந்தும் எலுமிச்சம் பழம் ஆரஞ்சு பழ தோளிலிருந்து தயாரிக்கும் காட்ரோஸ்,காட்பவுடர் தயாரிக்கும் துவக்க நிலையை கேட்டறிந்தார் மேலும் வளம் மீட்பு பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் கோழி வாத்து வளர்ப்பு குறித்தும் கேட்டறிந்தார் இயற்கை உணவு பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் இயற்கை எரி வாய்வை(பயோகேஸ்) பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார் பேரூராட்சி அலுவலகத்தில் மேல் தளத்தில் அமைந்துள்ள மூலிகை தோட்டம் காய்கறி தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் கால்மிதி தயாரிக்கும் இயந்திரம் கொண்டு பணியாளர்களால் தயாரிக்கப்பட்ட கால்மிதிகளை விற்பனையை துவக்கி வைத்தார் இயற்கை உரம் மண்புழு உரம் விற்பனையையும் துவக்கி வைத்தார் முன்னதாக நடந்த பேரூராட்சி கூட்டத்திம் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலர் அ.சாகுல் அமீது துணைத் தலைவர் சுதா சிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் காட்டுப்புத்தூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்ய பேரூராட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதி மக்கள் சேவையை சிறப்பாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் பேரூராட்சி உறுப்பினர் கருணாகரன் நன்றி கூறினார் கூட்டத்தில் அனைத்து பேரூராட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்த முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் உடன் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் காட்டுப்புத்தூர் நகர கழக தொட்டியம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி செயல் அலுவலர் அ.சாகுல் அமீது சிறப்பாக செய்திருந்தார்.