கரூர் மாவட்டம் குளித்தலைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு குளித்தலை கோட்ட பத்திரிகையாளர்கள் பொன்னாடை போற்றி வரவேற்பு அளித்தனர். குளித்தலையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் அவர்கள் தனது மகனுக்கு 18.09.22 அன்று சென்னையில் நடைபெறும் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ்களை குளித்தலை கோட்ட பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கினார். தனது உரையில் பத்திரிக்கையாளர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தருமாக அன்புடன் கேட்டுக் கொண்டார். பத்திரிகையாளர்களும் தனது குடும்பத்துடன் கண்டிப்பாக கலந்து கொண்ட விழாவினை சிறப்பித்து தருவோம் என உறுதி உடன் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களான தேசிய உறுப்பினர் டாக்டர் கே எஸ் சுப்பையா , திருச்சி மாவட்ட தலைவர் ஆர் எஸ் பாலாஜி , பேராயர் ஜான் ராஜ்குமார் மற்றும் பத்திரிக்கையாளர் நண்பர்களும் கலந்து கொண்டு மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.