முக்கியச்செய்தி

கட்டிட உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளர்?

Spread the love

வை.புதூர் பகுதியில் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கட்டிட உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளர்: ராணுவ வீரரின் மனைவி கை எடுத்து கும்பிட்டு கண்ணீருடன் கெஞ்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியில் உள்ளது அரசு மதுபானக்கடை. இக்கடை கடந்த 6 வருடங்களாக அப்பகுதியை சேர்ந்த குமார் சுரேஷ் என்பவர்களுரக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக கடை அருகே பிளாட் பகுதியில் ஏற்கனவே நிலம் வாங்கியோர் தற்போது வீடுகளை கட்டி குடியேறியுள்ளனர்.

 

இந்நிலையில் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிகொண்டு அருகில் உள்ள பிளாட் பகுதியிலும், விவசாய நிலங்களிலும் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பதும், பிளாஸ்டிக் குப்பைகளை விளைநிலங்களில் கிடப்பதால் விவசாயிகளும் வேதனை அடைந்து வருங்கின்றனர்.

இதுகுறித்து இடத்தின் உரிமையாளர் குமார்  மற்றும் சுரேஷ்யிடம் புகார் அளித்தும் வேறு இடத்திற்கு கடை மாற்றவும் கூறியுள்ளனர்கள். இதனால் கரூர் மாவட்ட மேலாளரிடம் தொடர்பு கொண்டு கடையை இடம் மாற்றம் செய்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். அதற்கு  வை ட்டமின் ப கொடுத்தால் இடத்தை மாற்றி கொள்கிறோம் என மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கட்டிடத்தின் உரிமையாளர்கள் குமார் மற்றும் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

அக்கம் பக்கம் வீடு இல்லாதபோது கடைவைக்க அனுமதி அளித்துள்ளனர். 2 வருடம் அக்ரிமெண்ட் முடிந்தும் கடை எடுக்காமல் உள்ளனர். அருகில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை மற்றும் குச்சு வெளி கன்றுகளை உடைத்து விடுவதாகவும் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளாகள்.அருகில் உள்ள வீட்டுக்குள் பாட்டில்களை உடைத்து விடுவதாகவும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் குளித்தலை போலீசார் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

அருகில் குடியிருக்கும் வீடுகளுக்கு சென்று தனியாக வசிக்கும் குடியிருப்பு பெண் வாசிகளிடம், குடிமகன்கள் மதுவில் கலந்து குடிக்க தண்ணீர் கேட்பதாகவும், தண்ணீர் கொடுக்க மறுத்தால் இங்கு வாழ முடியாது என தகாத வார்த்தையால் திட்டி மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறொரு இடத்திற்கு மாற்றவேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இது அரசு கடையா? தனியார் கடையா என விளம்பர பலகை கூட இல்லாத நிலைமை கூட உள்ளது.

பேட்டி: கட்டிடத்தின் உரிமையாளர் குமார்

 

Print Friendly, PDF & Email
idimurasutv
idimurasuTv please share
https://idimurasutv.com