கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்துக்காக ரூ.20,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரனை கைது செய்துள்ளார். லஞ்சம் பெற உடந்தையாக இருந்த தேநீர் கடை உரிமையாளர் பாலாஜியையும் லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது. மாணிக்கவாசகம் என்பவரது வீட்டுக்கு வரி நிர்ணயிக்க ரூ.20,000 லஞ்சம் பெற்றபோது வருவாய் அலுவலர் சிக்கினார்.