காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் இஒ ச.சாகுல் அமீது தலைமையில் குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது.

Spread the love

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேரூராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுவின் செயலாளரும் பேரூராட்சி செயல் அலுவலருமான ச.சாகுல் அமீது தலை தாங்கினார்.குழந்தை பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் தலைவர் சு.சங்கீதா, துணைத்தலைவர் சி.சுதா மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவின் பொறுப்பாளர் சு.பரமேஸ்வரி, ஆற்றுப்படுத்துநர் பேரூராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டத்தின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு செயல்பாடுகளை பற்றி தெரிவித்தானர்.
பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், குழந்த தொழிலாளர், பள்ளி இடைநிற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்பாட்டாலோ அல்லது கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், சிறைவாசிகாளக உள்ள பெற்றோர்களின் குழுந்தைகள், கொடிய நோய் தொற்று உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் போன்ற பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டாலோ, குழந்தைகளுக்கான 24 மணிநேரமும் இலவசமாக செயல்படும் தொலைபேசி எண்ணான 1098, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் தொலைபேசி எண்ணான 0431-2413055 மற்றும் குழந்தை நலக்குழுநின் தொலைபேசி எண்ணான 0431 – 2413819 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக தெரிவித்தல். பள்ளி குழந்தைகள் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக, பள்ளிகளின் அருகில் போதை பொருள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581 க்கு தகவல் தெரிவித்தல், பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தை தத்தெடுத்தல் கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு குழந்தைகள் நலன் தொடர்பான அலுவலகங்களுக்கோ அல்லது காவல் துறைக்கோ தகவல் தெரிவித்தல். இளைஞர் நீதிச் சட்டம் 2015ன் கீழ் பதிவு பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டால் தகவல் தெரிவித்தல். மாற்று குடும்ப முறையின் அடிப்படையில் குழந்தைகள் இல்லத்திலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட குழந்தைகளுக்கு வாழ்வாதார தேவைகள் இருப்பின் அரசு திட்டங்களுடன் இணைத்திட தெரிவிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் உறுப்பினர்களான உறுப்பினர்கள் சந்திரகலா, அன்னபூரணி, காயத்திரி, கருணாகரன், ராணி, விஜயா, இளஞ்சியம், அரசினர் மேல்நிலைப்பள்ளி (மேற்கு) ஆசிரியர் பாலாஜி, பள்ளி மாணவர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் இராஜேந்திரன், பாரதியார், சித்ரா, துப்புரவு பணி மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Print Friendly, PDF & Email