ஏரோ டான் நிறுவனம் மற்றும் மை பிளை ஸ்கை நிறுவனம் மூலம் வரும் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு மதுரையை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இச்சேவையானது விமான நிலையம் பின்புறம் நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இருந்து இந்த வான்வழி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்த ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கர்நூலிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பகுதியாக […]
தமிழ்நாடு
செயல் அலுவலர் பொறுப்பு ஏற்பு
திருச்சி மாவட்டம் மேட்டுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக இன்று சதீஷ் கிருஷ்ணன் பொறுப்பேற்றார் .இவர் இதற்கு முன் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு பேரூராட்சியில் செயல் அலுவலாராக பதவி வகித்தார் .பொறுப்பு ஏற்ற செல் அலுவலர் அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் இடி முரசு குழுமத்தின் ஆசிரியர் ஜேசிபி டாக்டர் சரவணன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்
புலியூர் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு
கரூர் மாவட்டம் புலியூர்(தேர்வுநிலை)பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர், குழந்தைகள் நல அலுவலர், பள்ளி ஆசிரியர்கள்,பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் தலைமையில் உலக சுற்றுசூழல் தினத்தில் சுற்றுசூழலை பாதுகாப்பது குறித்து உறுதி மொழி உறுதி மொழி ஏற்ப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் உலக சுற்றுசூழல் தினத்தினை முன்னிட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சுற்றுசூழலை பாதுகாப்பது குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். சுற்றுசூழலை பாதுகாக்கும் வண்ணமும், மாசினை குறைக்கும் விதமாக பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் இளநிலை உதவியாளர் பாரதியார், சித்ரா, பதிவறை எழுத்தர் மாணிக்கவள்ளி, துப்பரவு பணிமேற்பார்வையாளர்(பொ) கண்ணன், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குலதெய்வ வழிபாட்டுக்காக கமுதியிலிருந்து ராஜபாளையத்துக்கு 214 மாட்டு வண்டிகளில் பயணித்து ஊர் திரும்பிய மக்கள்:…..
கமுதி அருகே இருந்து ராஜபாளையத்துக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக 15 நாட்கள் 214 மாட்டு வண்டிகளில் பயணம் செய்த 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர் திரும்பினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள அகத்தாரிருப்பு தாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பரமக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 56 கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்களது குலதெய்வம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கூடமுடைய அய்யனார் கோயில், பொண்ணு இருளப்பசாமி கோயில், தைலாகுளம் வீரமாகாளி கோயில் […]
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் செயல்அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் கழிவு நீர் அகற்றுதல் பணி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா ஆணைக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல்அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் அதற்கான பணி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா சுரேஷ், துணைத்தலைவர் சி.சுதா சிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் பேசுகையில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பேரூராட்சியில் எல்லையில் சாலை ஓரங்கள், நீர்நிலைகள், ஓடைகள் மற்றும் இதர பகுதிகளில் […]
தொட்டியம் பேரூராட்சி பகுதியில் இளைஞர்களை ஊக்குவிக்க நகர்புற கற்றல் மானியத்துடன் வேலைவாய்ப்பு பயிற்சி:பயன்படுத்திக் கொள்ள செயல் அலுவலர் அழைப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி பகுதியில் நகர்புற கற்றல் வேலைவாய்ப்பு திட்டம் வாயிலாக இளைஞர்களை ஈடுபடுத்த ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இத்திட்டத்தின் கீழ் ஒரு பேரூராட்சிக்கு ஒரு நபருக்கு இரண்டு மாத காலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் அரசாங்கத்தால் ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் மானியம் வழங்கப்படும் இப் பயிற்சியில் கலந்து கொள்பவர்கள இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் இணையதளம் வழியாகவே மாணவர்களின் சான்றுகள் பரிசோதித்து ஒரு நபரை மட்டுமே தேர்வு செய்வார்கள் பட்டப்படிப்பு […]
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் விழிப்புணர்வு செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமை நடைபெற்றது
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் ஆணைக்கிணங்க காட்டுப்புத்தூர் பேரூராட்சி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இணைந்து காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியினை முற்றிலும் நெகிழியில்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறு சுழற்சிக்கு வழியில்லாத ஒருமுறை பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோள் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக்/ […]
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் தலைமையில் அலுவலக பணியாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தா.காளியப்பன் ஆய்வுக்கூட்டத்தினை தொடர்ந்து காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அலுவலக பணியாளர்களுக்கு செயல்அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. சொத்துவரி முதல் அரையாண்டு மற்றும் இரண்டாம் அரையாண்டு கேட்பு தொகையினை விரைந்து வசூலித்திடவும், குடிநீர் கட்டணம் மற்றும் வரியற்ற இனங்கள் வசூல் செய்திடவும், நடைப்பெற்று வரும் திட்டப்பணிகளான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அம்ரூத் 2.0, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் 15 வது நிதிக்குழு மான்யம் […]
நாமக்கல் அருகே போதையில் விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் எல்லமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.5941 கடையில் பீர் பாட்டில் ரூ10 முதல் 20 ரூவரை கோட்டர் ரூ 5 முதல் ரூ 15 வரை விற்பனையாளர்கள் .மேலும் நேர்மையாக நடந்து கொள்ளும் மாவட்ட மேலாளர் நடவடிக்கை எடுக்க சமூக ஆவலர்கள் கோரிக்கை.